
இக்கல்லூரித் தொடங்கப்பட்ட 1998-ஆம் ஆண்டு முதலே தமிழ்த்துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்ப் படிக்கும் மாணவர்களுக்குப் பொதுத்தமிழை சிறந்த முறையில் கற்றுத்தருவதோடு அவர்களின் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டக் கூடியதாகவும் தமிழ்க்கல்வி அமைகிறது. சங்க இலக்கியம், தொல்காப்பியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், அற இலக்கியங்கள், சமய இலக்கியங்கள், புதினங்கள், சிறுகதைகள், கணினித்தமிழ், அறிவியல் தமிழ் எனப் பல்வேறு தமிழ்ப் பாடப்பகுதியில் இலக்கியங்கள் கற்பிக்கப்படுகிறது. தமிழ்மொழிக் கல்வியால் சிறந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கில் பாடத்திட்டம் அமைகிறது. தமிழ்ப் பாடத்தைப் முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்காத மாணவர்களுக்கும் தமிழ்மொழியை அறிமுகப்படுத்துகிறது. திருவள்ளுவர், ஒளவையார், பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழறிஞர்களின் படைப்புகளை மாணவர்கள் கற்பதால் தமிழின் தொன்மையும் வளமும் அறியமுடிகிறது. தமிழில் இலக்கியம், இலக்கணம் மட்டுமன்றி அன்பு, அறம், ஈகை, பண்பு போன்ற பல உலகளாவிய மெய்ப்பொருளை தமிழ் இலக்கியக் கல்வி கற்றுத்தருகிறது. தமிழ் இலக்கியத்தை மாணவர்கள் கற்கும் பொழுது சிந்தனைவளம் பெருகிப் புதிய படைப்புகளைப் படைக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைகிறது. தமிழ் இலக்கியம் கற்பதால் நாட்டின் சிறந்த குடிமகனாகப் பெருமிதத்தோடுத் தலைநிமிர்ந்து வாழமுடியும். தாய்மொழிக் கல்வியை படிப்பதால் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்க்கல்வி அமைகின்றது. தமிழ்த்துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் முனனவர் பட்டமும் (பகுதி நேரக் கல்வி) செயல்பட்டு வருகிறது. ஆராய்ச்சி மாணவர்களும் தங்கள் ஆய்வுகளை வழங்க இ-ஆய்விதழ் (E-Journal) வசதியும் நூலகப் பயன்பாடுகளும் கல்லூரியில் மிகச் சிறப்பான முறையில் அங்கம் வகிக்கின்றது. தமிழ்த்துறையில் பேராசிரியர்கள் முனைவர் பட்டம் மற்றும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற திறமை வாய்ந்த பேராசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது.
பார்வை
இன்றைய உலகளாவிய சூழலில் மொழியின் தேவை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் வாழ்க்கையில் சிறந்து விளங்கக் தமிழ் இலக்கியக் கல்வியின் வழியே மாணவர்களை மேம்படுத்துவதாக அமைகிறது.
பணி
பல்வேறு துறை சார்ந்த மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட முன்னேற்றமாகக் கருதப்படக் கூடிய பணி, தொழில் மற்றும் பல நிலைகளில் முன்னேற அறச்சிந்தனையைக் கடைப்பிடிக்க உதவுகிறது.
தமிழ் இலக்கியத்தின் பயன்கள்
மொழித் திறன் மேம்பாடு
* தமிழ் இலக்கியங்களைப் படிப்பதன் மூலம் நமது மொழித்திறன் மேம்படும். புதிய சொற்களைக் கற்றுக்கொள்வதோடு, இலக்கண நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள முடியும்.
* சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்கும்போது, அவர்களின் எழுத்து நடையைப் பின்பற்றி நாமும் சிறந்த எழுத்தாளராக உருவாக முடியும்.
பண்பாட்டு அறிவு
* தமிழ் இலக்கியங்கள் நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய ஆழமான அறிவை வழங்குகின்றன.
* சங்க காலம் முதல் தற்காலம் வரையிலான மக்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றை இலக்கியங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வரலாற்று அறிவு
* தமிழ் இலக்கியங்கள் நமது வரலாற்றைப் பற்றிய தகவல்களின் களஞ்சியமாக உள்ளன.
* பண்டைய கால அரசர்கள், அவர்களின் ஆட்சி முறை, போர்கள், சமூக நிகழ்வுகள் போன்றவற்றை இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தார்மீக மற்றும் ஆன்மீக வளர்ச்சி
* தமிழ் இலக்கியங்கள் அறநெறி மற்றும் ஆன்மீக கருத்துக்களை உள்ளடக்கியுள்ளன.
* திருக்குறள், அவ்வையார் பாடல்கள் போன்ற நீதி நூல்கள் நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றன.
* பக்தி இலக்கியங்கள் இறைவனைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகின்றன.
மனநல மேம்பாடு
* தமிழ் இலக்கியங்களைப் படிக்கும்போது நமது மன அழுத்தமும் கவலையும் குறையும்.
* இலக்கியங்கள் நமது மனதிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன.
* சிறந்த இலக்கியங்களைப் படிக்கும்போது நமது சிந்தனைத் திறன் மேம்படும்.
வேலை வாய்ப்புகள்
* தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன.
* ஆசிரியர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் போன்ற வேலைகளில் ஈடுபடலாம்.
* ஊடகங்கள், திரைப்படத் துறையிலும் தமிழ் இலக்கிய அறிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.










